/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாட்டு பச்சை மிளகாய் கிலோ ரூ. 60க்கு விற்பனை
/
நாட்டு பச்சை மிளகாய் கிலோ ரூ. 60க்கு விற்பனை
ADDED : ஜன 14, 2024 04:58 AM

காரியாபட்டி, :நாட்டு பச்சை மிளகாய்க்கு நல்ல கிராக்கி இருப்பதால் சந்தையில் கிலோ ரூ. 60 வரை விற்பனையாகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரியாபட்டி ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, எஸ். மறைகுளம், எஸ்.தோப்பூர், கழுவனச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் அதிக அளவில் நாட்டு பச்சை மிளகாய் செடிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரியாபட்டி கழுவனச்சேரி பகுதியில் விளைந்த நாட்டு பச்சை மிளகாய்களை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் சந்தையில் நாட்டு பச்சை மிளகாய்க்கு நல்ல கிராக்கி இருக்கும். கிலோ ரூ. 60க்கு விற்பனை ஆகிறது. ஓரளவிற்கு லாபமானதாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாஸ்கரன், விவசாயி, காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் கரிசல் தரை என்பதால் தோட்டங்களில் தனி பயிராக நாட்டு பச்சை மிளகாய் செடி பயிரிட்டு வருகிறோம். எந்த சூழ்நிலையிலும் நன்றாக விளையக்கூடியது. முறையாக பராமரித்து வந்தால் நாட்டு பச்சை மிளகாயில் எந்தவித பாதிப்பும் இருக்காது.
எப்போதுமே கிராக்கி இருக்கும். தற்போது நல்ல விலை கிடைப்பதால் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தரமான காயாக இருந்தால் ரூ. 60க்கும், சுமாராக இருந்தால் ரூ. 50க்கும் விற்பனையாகிறது.போதிய விலை கிடைக்கவில்லை என்றால் வத்தலுக்கு விட்டு விடுவோம், என்றார்.

