/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாயிருப்பில் சேதமான ரோடு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
குண்டாயிருப்பில் சேதமான ரோடு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
குண்டாயிருப்பில் சேதமான ரோடு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
குண்டாயிருப்பில் சேதமான ரோடு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஜன 21, 2024 03:02 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் குண்டாயிருப்பு பஸ் ஸ்டாப்பில் சேதம் அடைந்துள்ள ரோட்டில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
வெம்பக்கோட்டையில் இருந்து குண்டாயிருப்பு வழியாக ஆலங்குளம் செல்லும் ரோடு 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. குண்டாயிருப்பு பஸ் ஸ்டாப் வழியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் செல்கின்றது. இதன் வழியே ஏராளமான பஸ்கள் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் குண்டாயிருப்பு பஸ் ஸ்டாப் அருகே குழாய் சேதம் அடைந்ததால் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. வளைவு பகுதி வேறு என்பதால் இதில் வருகின்ற வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றது.
மேலும் இரவில் டூவீலரில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சேதமடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.