ADDED : ஜன 14, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி தொடுவன்பட்டியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் 52. இவரது மகள் துர்கா 18, கார்மெண்ட்ஸில் வேலை செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டார். வீட்டில் அலைபேசியில் படம் பார்த்து, கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட தாய் பாப்பாத்தி சத்தம் போட்டதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

