ADDED : ஜன 23, 2024 04:08 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் உள்ள இலங்கை தமிழருக்காக கட்டப்பட்டுள்ள முகாம் வீடுகளை பயனாளிகளிடம் வழங்க வேண்டும் என முகாமை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது. இதில் 109 வீடுகள் உடைக்கப்பட்டு புதியதாக கட்டபட்டது. இந்த வீடுகளில் வசித்தவர்கள் அருகே உள்ள பகுதியில் தகர செட் அமைத்து வசிக்கின்றனர். மேலும் பலர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றதாகவும், புதிய வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்தும் பயனாளிகளிடம் வழங்கப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர் என்பதால் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

