/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட ஊராட்சி தலைவர் புகார் எதிரொலி; அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பதவி பறிப்பு

ADDED : பிப் 02, 2024 05:57 AM
சிவகாசி : மாவட்ட ஊராட்சி தலைவர் டி.ஐ.ஜி., யிடம் புகார் அளித்ததன் எதிரொலியாக மாவட்ட கவுன்சிலரின் கணவர், சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க., 13, தி.மு.க., 7 என 20 உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க., வைச் சேர்ந்த 2 வது வார்டு உறுப்பினர் வசந்தி மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் மான்ராஜ் ஶ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 3 வது வார்டு கவுன்சிலர் கணேசன் சமீபத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி அவரது கணவர் எம்.எல்.ஏ., மான்ராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல் புகார் அளித்தார். இதுகுறித்து கட்சி நடவடிக்கை எடுக்காததால் கணேசன் தி.மு.க.,வில் இணைந்தார்.
இதையடுத்து மாவட்ட ஊராட்சியில் தி.மு.க.,வின் பலம் 8 ஆக அதிகரித்தது.
மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, 4 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் வேல்ராணியின் கணவர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் நிர்வாகத்தில் தலையிடுவதுடன், ஜாதி ரீதியில் விமர்சிப்பதாக மதுரை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் ஜன. 13 ல் புகார் அளித்தார்.
சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் சில நிர்வாகிகளும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.