/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டில்லிக்கு போய் நிதி பெற முடியாத தி.மு.க.,விற்கு ஆட்சி தேவையா: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேள்வி
/
டில்லிக்கு போய் நிதி பெற முடியாத தி.மு.க.,விற்கு ஆட்சி தேவையா: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேள்வி
டில்லிக்கு போய் நிதி பெற முடியாத தி.மு.க.,விற்கு ஆட்சி தேவையா: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேள்வி
டில்லிக்கு போய் நிதி பெற முடியாத தி.மு.க.,விற்கு ஆட்சி தேவையா: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேள்வி
ADDED : பிப் 01, 2024 11:57 PM

விருதுநகர்: டில்லியில் போய் நிதியை பெற முடியாத உங்களுக்கு ஆட்சி தேவையா, என விருதுநகரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணுக்கு கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி தர வலியுறுத்தி அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அவைத்தலைவர் விஜயகுமரன் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., மான்ராஜ், மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, நகரச்செயலாளர் வெங்கடேஷ், ஒன்றியச்செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசியதாவது:. தி.மு.க., அரசால் யாருக்கும் பயனில்லை. சேலம் மாநாடு வீழ்ச்சி. அது ஒரு கேலிக்கூத்து. தி.மு.க., மாநாட்டில் உதயநிதி பேசும் போது சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். ஸ்டாலின் பேசும் போது அவர்கள் வெளியேறி கொண்டிருந்தனர். பார்லி. தேர்தலில் தி.மு.க.,விற்கு வீழ்ச்சி காத்திருக்கிறது. படுதோல்வியை சந்திக்க போகிறது. அ.திமு.க., பிரம்மாண்ட வெற்றியை பெற உள்ளது. கிராமங்கள் தோறும் அ.தி.மு.க., அலை வீசுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒன்றுமே இல்லை. பலருக்கும் கரும்பு கொடுக்கவில்லை. ரூ.ஆயிரமும் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட விடியா அரசின் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும். பழனிச்சாமியின் ஆட்சி வர வேண்டும். சென்னை வெள்ளத்தின் போது தி.மு.க., அமைச்சர்கள் யாரும் முதல் ஐந்து நாள் வந்தார்களா. மேடான பகுதிகளை பார்த்து விட்டு எல்லாம் சரியாகிவிட்டது என்று மீட்பு பணிகளை சொதப்பினர்.
டில்லியில் போய் நிதியை பெற முடியாத உங்களுக்கு ஆட்சி தேவையா. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது கஜா புயலால் அத்தனை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், பயிர்க்கடன் வழங்கப்பட்டது. உங்களிடம் எதை கேட்டாலும் டில்லியை கை காட்டுகிறீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு எதற்கு ஆட்சி. டில்லியில் இருந்து பணம் வரவில்லை என்றால் இங்குள்ள பணம் என்ன ஆனது.
டாஸ்மாக், சொத்துவரி என எல்லா விலையையும் அதிகரித்து விட்டீர்கள். 3லட்சம் கோடி அதிகமாக கடன் வாங்கி இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த கடனில் என்ன செய்தீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் என்றனர்.

