/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காதை கிழிக்கும் ஏர் ஹாரன்கள் அருப்புக்கோட்டையில் அலறும் மக்கள்
/
காதை கிழிக்கும் ஏர் ஹாரன்கள் அருப்புக்கோட்டையில் அலறும் மக்கள்
காதை கிழிக்கும் ஏர் ஹாரன்கள் அருப்புக்கோட்டையில் அலறும் மக்கள்
காதை கிழிக்கும் ஏர் ஹாரன்கள் அருப்புக்கோட்டையில் அலறும் மக்கள்
ADDED : ஜன 19, 2024 04:14 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் காது கிழியும் அளவிற்கு வாகனங்கள் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அலறி ஓட வேண்டியுள்ளது.
அருப்புக்கோட்டை நகரில் இருந்து பல ஊர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக வாகனங்கள் செல்கின்றனர். தனியார் பஸ்களில் மக்களின் காதை கிழிக்கும் வகையில் ஏர்ஹாரன்களை ஒலித்துக் கொண்டே செல்கின்றன. கனரக வாகனங்களும் அதிக சத்தம் உள்ள ஏர் ஹாரன்களை பயன் படுத்துகின்றன.
இதனால் இருசக்கர வாகனங்கள் வருவோர் பின்னால் வரும் வாகனங்கள் அதிக சப்தத்துடன் ஏர் ஹாரன்களை ஒலிப்பதால் நிலைதடுமாறி விபத்து ஏற்படுகிறது. பொதுமக்களும் பயந்து ஓட வேண்டியுள்ளது. திருச்சுழி ரோட்டில் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் என உள்ளன. இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் ஏர் ஹாரன்களை ஒலித்துக் கொண்டே செல்வதால் பள்ளி மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொந்தரவாக உள்ளது. ஒரு சில பள்ளி கல்லூரி வாகனங்களிலும் ஏர்ஹாரன்களை தொடர்ந்து ஒலித்து கொண்டே செல்கின்றன.
மக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்று வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதும் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

