/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் அதிகாலையில் கலெக்டர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் அதிகாலையில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 01, 2024 11:51 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிகாலை 12:00 மணிக்கு கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஜெயசீலன் அருப்புக்கோட்டையிலேயே தங்கி 2 நாட்கள் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றார். திட்டத்தின் ஒரு பகுதியாக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 12:00 மணிக்கு சென்று ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு அறிந்தார். பின்பு நோயாளிகளிடம் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா என கேட்டு தெரிந்து கொண்டார். உடன் அதிகாரிகள் மருத்துவர்கள் அலுவலர்கள் இருந்தனர்.

