/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசபக்தியுடன் இருந்தால் நாடு சிகரத்தை அடையும் கல்லுாரி முன்னாள் முதல்வர் பேச்சு
/
தேசபக்தியுடன் இருந்தால் நாடு சிகரத்தை அடையும் கல்லுாரி முன்னாள் முதல்வர் பேச்சு
தேசபக்தியுடன் இருந்தால் நாடு சிகரத்தை அடையும் கல்லுாரி முன்னாள் முதல்வர் பேச்சு
தேசபக்தியுடன் இருந்தால் நாடு சிகரத்தை அடையும் கல்லுாரி முன்னாள் முதல்வர் பேச்சு
ADDED : ஜூலை 05, 2025 02:59 AM

விருதுநகர்: மாணவர்கள் தேசபக்தியுடன் இருந்தால் தான் நாடு சிகரத்தை அடையும்,என விருதுநகர் ஸ்ரீவித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் திருவேடகம் மேற்கு விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் முதல்வர் வன்னியராஜன் பேசினார்.
ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கடராமானுஜ தாஸ் தலைமையில் நடந்தது.கல்விக்குழும அறங்காவலர் கோதையாண்டாள், செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் கணேசன் பேசினார். துணை முதல்வர் பசுபதி வரவேற்றார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தனரை அறிமுகம் செய்தார்.
திருவேடகம் மேற்கு விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் முதல்வர் வன்னியராஜன் பேசியதாவது:
கிராம முன்னேற்றத்தில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. நமது நாட்டின் கலாசாரத்தை பிற நாட்டிற்கு கொண்டுசெல்லும் துாதுவர்கள் தான் இளைஞர்கள். மாணவர்களாகிய நீங்கள் தேசபக்தியுடன் இருந்தால் தான் நாடு சிகரத்தை அடையும். தேசத்தை உயர்த்தும் பண்புகளை வளர்த்தெடுப்பதிலும், முழு திறன்களை வளர்த்து கொள்ளும் இடமாகவும் இக்கல்லுாரியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்,என்றார்.
கோடை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. சிலம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவி பேராசிரியர்கள் ஜெனிபர் சங்கீதா, காளீஸ்வரி தொகுத்து வழங்கினர். உதவி பேராசிரியர் பாரதி நன்றிக்கூறினார்.