/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெங்கு காய்ச்சலில் மேட்டமலையில் சிறுமி பலி
/
டெங்கு காய்ச்சலில் மேட்டமலையில் சிறுமி பலி
ADDED : ஜன 24, 2024 04:59 AM
சாத்துார் : சாத்துார் அருகே மேட்டமலையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார்.
மேட்டமலையைச் சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன் இவரது மகள்கள் திகன்யா ஸ்ரீ , 4. தியா ஸ்ரீ, 3. திகன்யா யுகேஜி படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு திகன்யா ஸ்ரீ ,தியாஸ்ரீ இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தியாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் டெங்கு அறிகுறி இருப்பதாக கூறியுள்ளார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி தியா ஸ்ரீ பலியானார். இதுகுறித்து சாத்துார் சுகாதாரத் துறை ஆய்வாளர் நாகராஜ் கூறிதாவது: மேட்டமலை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இல்லை. இறப்புக்கு மூச்சுத் திணறல் தான் காரணம். என்றார்

