ADDED : ஜன 19, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை தாக்கிய ஆதிதிராவிட நலத்துறை நலக்குழு உறுப்பினர் மாரியப்பனை கைது செய்ய கோரி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட இணை செயலாளர் கண்ணன் முத்தரசு தலைமை வகித்தார். செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், உட்பட பல சங்கத்தினர் பங்கேற்றனர்.
விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை தாக்கிய ஆதிதிராவிடத்துறை நலக்குழு உறுப்பினர் மாரியப்பனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

