/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2023ல் மாவட்டத்தில் 27,094 குழந்தைகள் பிறப்பு
/
2023ல் மாவட்டத்தில் 27,094 குழந்தைகள் பிறப்பு
ADDED : ஜன 24, 2024 05:27 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஜன., முதல் டிச., வரை 27, 094 குழந்தைகள் பிறந்துள்ளது. அதே போல 19, 619 இறப்பு பதிவாகி உள்ளதாக விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதா மணி தெரிவித்தார்.
மாவட்டத்தில் காரியப்பட்டி,அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார், ,சிவகாசி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளிலும் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு தினமும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைக்காக கர்ப்பிணிகள் வருகின்றனர்.
முந்தைய ஆண்டுகளை விட தற்போது அரசு மருத்துவமனைகள், துணை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடப்பது அதிகரித்துள்ளது. 2023 ஜன.,முதல் டிச., வரை மாவட்டத்தில் 27, 094 குழந்தைகள் பிறந்துள்ளது.
அதே போல 2023 ல் மாவட்டத்தில் விபத்து, தற்கொலை, இயற்கை மரணம் உள்ளிட்டவைகளில் 19, 619 பேர் இறந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் யசோதா மணி தெரிவித்தார்.

