ADDED : ஜன 23, 2024 03:59 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் டி.பி.,மில் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் பழைய பஸ் ஸ்டாண்டு பஸ் ஸ்டாப் அருகே டைகர் வுட் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
பாம்பே குரூப் அதிபர் இஸ்மாயில் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கடை உரிமையாளர் டைகர் சம்சுதீன் வரவேற்றார். விழாவில் சென்னை தொழிலதிபர் ராம்சிங் ராஜா, பாபி மேட்ரஸ் நிர்வாக இயக்குனர் பாலமுருகன், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், எம்.பி., தனுஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜன், வைமா கல்வி குழும தலைவர் திருப்பதி செல்வன், நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஷோரூமில் கலைநயம் மிக்க தேக்கு மர பொருட்கள், உயர்ரக கம்பெனி மெத்தைகள் பல்வேறு டிசைன்களில் குவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக ஜன. 31 வரை இப் பொருட்களுக்கு 50 சதவீதம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மாடல்களில் செய்து தரப்படும் என கடை உரிமையாளர் டைகர் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

