/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்: பி.எப்., மண்டல கமிஷனர் தகவல்
/
புதிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்: பி.எப்., மண்டல கமிஷனர் தகவல்
புதிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்: பி.எப்., மண்டல கமிஷனர் தகவல்
புதிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்: பி.எப்., மண்டல கமிஷனர் தகவல்
ADDED : செப் 26, 2025 01:52 AM

விருதுநகர்: உரிமையாளர், பணியாளரை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பி.எப்., (வருங்கால வைப்பு நிதி) மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த திட்டம் குறித்தும், அதில் உள்ள ஊக்கத்தொகை குறித்த விளக்கக்கூட்டம் பி.எப்., மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் தலைமையில் நடந்தது. அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, மனோகரன், அண்ணாதுரை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் பேசியதாவது:
தொழில் நிறுவனங்கள் பணியாளர்களிடம் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உரிமையாளர், பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டடத்தில் 2025 ஆக. 1 முதல் 2027 ஜூலை 31 வரை புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் படி ஒரு தொழிலாளிக்கு ரூ.15 ஆயிரம் வரை இரு தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் ஒரு தொழிலாளியை பணிக்கு சேர்த்ததற்காக அந்த நிறுவனங்களின் கணக்கில் ஒரு தொழிலாளிக்கு ரூ. 3 ஆயிரம் வரை மாதம்தோறும் இரண்டு ஆண்டுகளுக்கு வரவு வைக்கப்படும். இந்த முறை ஒரு நிறுவனத்தில் எத்தனை தொழிலாளர்கள் புதிதாக சேர்ந்தாலும் பொருந்தும்.
இதுவே உற்பத்தி தொழில் சார்ந்த நிறுவனங்களாக இருந்தால் 4 ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்து, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைபவர்களின் எண்ணிக்கையும் உயரும், என்றார்.