/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து வாலிபர் குதித்த சம்பவம் ஏ.டி.எஸ்.பி., விசாரணை

ADDED : ஜன 10, 2024 01:08 AM
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட காளீஸ்வரன் 28, மது போதையில் மாடியில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி,., சோமசுந்தரம் விசாரித்தார்.
மல்லாங்கிணர் தனியார் நிறுவனத்தில் வேலை முடித்து வெளியில் வந்த பெண்களை ஜன.7 மாலை கேலி, கிண்டல் செய்து மானபங்கப்படுத்திய மல்லாங்கிணர் மேட்டுப்பட்டியை சேர்ந்த காளீஸ்வரன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார்.
மல்லாங்கிணர் ஸ்டேஷனுக்கு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
காளீஸ்வரன் மனைவி உடன் இருந்துள்ளார். அப்போது எஸ்.ஐ., வெளியில் சென்றிருந்ததால் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் அமர வைத்து பேசி கொண்டிருந்தனர். திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் போதையில் இருந்த காளீஸ்வரன் மாடியிலிருந்து குதித்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி., மல்லாங்கிணார் போலீசாரிடம் விசாரித்ததோடு சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தார்.