/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சிகளில் தெருக்களில் பெருகும் ஆக்கிரமிப்புகள்; ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரமுடியாத நிலை
/
உள்ளாட்சிகளில் தெருக்களில் பெருகும் ஆக்கிரமிப்புகள்; ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரமுடியாத நிலை
உள்ளாட்சிகளில் தெருக்களில் பெருகும் ஆக்கிரமிப்புகள்; ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரமுடியாத நிலை
உள்ளாட்சிகளில் தெருக்களில் பெருகும் ஆக்கிரமிப்புகள்; ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரமுடியாத நிலை
ADDED : ஜன 14, 2024 04:34 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தெரு ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது.
தேசிய , மாநில நெடுஞ்சாலை துறைகளே முழு அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் பஸ் ஸ்டாண்டை சுற்றி பஜார் வீதிகளில் டூவீலரில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
கடைகளுக்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் பொது நடைபாதைகளையும், வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து விட்டதால் பஸ்கள் செல்லும் ரோட்டில் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.
பல கிராமங்களில் பொது பயன்பாடு கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு நீதிமன்ற வழக்குகள் மூலம் உத்தரவு பெறப்பட்டால் கூட, உள்ளாட்சி அமைப்புகள் அதனை அகற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.
தெருக்களின் கழிவுநீர் வாறுகால்களின் உட்புறத்தில் தான் வீடுகளின் படிகள் இருக்க வேண்டும் என்ற உள்ளாட்சி அமைப்பின் விதியை யாரும் கடைபிடிப்பதில்லை. மாறாக தங்கள் வீட்டில் படிகளையும் பால்கனிகளையும், கார்கள் வந்து செல்ல சாய்வுதளத்தையும் ரோடு வரை இழுத்து விடுகின்றனர்.
இதனால் நகரில் பல தெருக்களில் கழிவு நீர் வாறுகால்கள் மீது திண்ணை, படிகள், குளியலறைகள் கட்டுவதால் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் தினசரி சுத்தம் செய்ய முடியாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரத் கேடு, கொசு தொல்லையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதிகரிக்கும் தெரு ஆக்கிரமிப்புகளால் ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது.
இதனை தடுக்க குறைந்தபட்சம் வருடம் ஒரு முறையாவது தெரு ஆக்கிரப்புகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இதற்கு மாவட்ட அரசு நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

