/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து உயிரை பாதுகாக்க உதவும் கருவி கண்டுபிடிப்பு
/
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து உயிரை பாதுகாக்க உதவும் கருவி கண்டுபிடிப்பு
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து உயிரை பாதுகாக்க உதவும் கருவி கண்டுபிடிப்பு
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து உயிரை பாதுகாக்க உதவும் கருவி கண்டுபிடிப்பு
ADDED : ஜன 14, 2024 04:32 AM

அருப்புக்கோட்டை : மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து தேங்கி கிடக்கும் தண்ணீரில் விழுந்து அதில் மின்சாரம் பாய்ந்து, அறியாமல் அதில் நடப்பவர்கள் மீது மின்சாரம் தாக்கி, விபத்து ஏற்படுவதை தடுக்க புதிய கண்டுபிடிப்பை அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் ஹர்ஷிதா, ராஜேஸ்வரி, கவிநயா, கீத பிரியா ஆகியோர் கான்சிலேசிங் சிஸ்டம் என்ற புதிய கண்டுபிடிப்பை, அடல் ஆய்வக பயிற்சியாளர் இந்துமதி, பொருப்புஆசிரியர் மனோன்மணி உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து மாணவிகள் கூறியதாவது:
மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பியை மிதித்து கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் பலி அடிக்கடி நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1லட்சம் பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தை சரி செய்ய நாங்கள் புதிய திட்டமான கான்சிலேசிங் சிஸ்டம் என்ற கருவியை உருவாக்கியுள்ளோம்.
இதில் ட்ரான்சிஸ்டர், ரெசிஸ்டர், சென்ஸார், ஆர்டினோ, எல்இடி, பஜ்ஜர் ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கிறோம். மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பது தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் அதில் கால் வைக்கின்றனர். அப்போது அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்படுகின்றனர்.
மின்கம்பி அறுந்தவுடன் கம்பி அறுந்து கிடப்பதை உணர்த்தும் வகையில் ஒலி அல்லது ஒளி எச்சரிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். இதனால் டிரான்ஸ்பார்மர் அருகே சில பிரச்சனைகளை இருப்பதை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். டிரான்ஸ்பார்மர் அருகிலோ அல்லது அந்த மின்கம்பியின் அருகிலோ யாரும் செல்ல மாட்டார்கள்.
குறிப்பிட்ட ட்ரான்ஸ்பார்மர் மின்கம்பி அறுந்தவுடன் அதை மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக நிலத்தடி கேபிள் மூலமாக சிக்னல் செல்லும் வகையில் இந்த கண்டுபிடிப்பை உருவாகி இருக்கிறோம். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும் தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மின்சார அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருவியில் சில எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதனடியில் ட்ரான்ஸ்பார்மர் எண்கள் குறிக்கப்பட்டு இருக்கும். ஏதாவது ஒரு டிரான்ஸ்பார்மரிலிருந்து மின்கம்பி அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்தில் அந்த எண்ணிற்கு நேரடியாக இருக்கக்கூடிய எல்இடி பல்பு எரியும். இதன் மூலம் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பி அறுந்து உள்ளது அறிந்து உடனடியாக சரி செய்ய முடியும். என்றனர்.
மேலும் நிதி ஆயோக், அட்டல் இன்னோவேஷன் மிஷன் இணைந்து நடத்திய இந்தியா முழுவதும் 12 ஆயிரம் மாணவ,மாணவிகள் பங்கேற்ற அட்டல் மாரத்தான் போட்டியில் இந்த கண்டுபிடிப்புக்காக மாணவிகள் தேசிய அளவில் 30 குழுக்களில் ஒரு குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூர் டெல் டெக்னாலஜிஸ், எல்.எல், எப்., இணைந்து நடத்திய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

