/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணியாளர்கள் பற்றாக்குறை சுகாதார பணிகள் தேக்கம்
/
பணியாளர்கள் பற்றாக்குறை சுகாதார பணிகள் தேக்கம்
ADDED : ஜன 24, 2024 05:27 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் வாறுகால் துார்வாருதல், குப்பை சேகரித்தல் போன்ற சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது 2011 ல் எடுத்த மக்கள் தொகை கணக்கின்படி 55 ஆயிரம் பேர் வசித்தனர்.அதன்படி227 துாய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 30 பேர் நிரந்தரமாகவும், 50 பேர் ஒப்பந்த அடிப்படையிலும்துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது 75 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால் இப்போதும் 30பேர் நிரந்தரமாகவும், 80 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிகின்றனர். இதனால் பெரும்பான்மையான தெருக்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் வாறுகால் துார்வாரப்படுகின்றது. மேலும் குப்பை சேகரிக்கவும் வழியில்லாமல் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது.

