/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் தலைக்காய சிகிச்சை பிரிவு மருத்துவமனை வேண்டும் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : மார் 28, 2025 05:35 AM
விருதுநகர் : விருதுநகரில் தலைக்காய சிகிச்சை பிரிவான ட்ராமா கேர் அமைக்க வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ., சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வழங்கிய தொகுதி கோரிக்கைகள் பற்றி கூறியதாவது: சிவகாசி எரிச்சநத்தம் பஸ் ஸ்டாண்டில் புதிய நவீன சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். விருதுநகர் அருப்புக்கோட்டை - அல்லம்பட்டி முக்குரோடு முதல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வரை உள்ள தார் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். விருதுநகர் அய்யனார் நகர் போலீஸ் பாலத்தை மேல்மட்ட பாலமாக கட்ட வேண்டும்.
கவுசிகா நதியின் இரு கரைகளிலும் நான்கு வழிச்சாலை, கலைஞர் நகர் முதல் அல்லம்பட்டி வரை தார் ரோடு அமைக்க வேண்டும். விருதுநகர் மருத்துவக்கல்லுாரி அருகில் விபத்து தலைக்காய சிகிச்சை பிரிவு மருத்துவமனை அமைக்க வேண்டும். விருதுநகர் கன்னிசேரிபுதுார், சிவகாசி எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலுகா மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும்.
விருதுநகர் வடமலைக்குறிச்சி, சங்கரலிங்கபுரம் கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து தர வேண்டும். மாவட்ட தலைநகரில் சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும். விருதுநகர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும், என்றார்.