ADDED : ஜூன் 26, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:' ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேதம் அடைந்து இருந்த புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி முதலமைச்சர் காப்பீடு திட்ட நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டடம் சீரமைக்கப்பட்டு புறநோயாளிகள் பிரிவு, காத்திருக்கும் அறை, கருத்தடை ஆலோசனை மையம், பரிசோதனை பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் கட்டடம் புனரமைக்கப்பட்டது. கட்டடத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரியப்பன் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.