/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியில் மருத்துவக்கழிவுகள் பாதிப்பு அச்சத்தில் மக்கள்
/
ஊருணியில் மருத்துவக்கழிவுகள் பாதிப்பு அச்சத்தில் மக்கள்
ஊருணியில் மருத்துவக்கழிவுகள் பாதிப்பு அச்சத்தில் மக்கள்
ஊருணியில் மருத்துவக்கழிவுகள் பாதிப்பு அச்சத்தில் மக்கள்
ADDED : அக் 16, 2025 09:54 PM

காரியாபட்டி:  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூரில் ரோட்டோரம்,   ஊருணி கரையில் மருத்துவ கழிவுளை கொட்டி வருவதால்  பாதிப்பு ஏற்படுமோ என  மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி ஆவியூரில் அரசகுளம் செல்லும் ரோட்டோரத்தில் குப்பை கொட்டி வருகின்றனர்.  அதன் அருகில்  ஊருணியும் உள்ளது.
அதில் மருத்துவமனை, மருந்தகங்களில் காலாவதியாகும் மருந்துகள்,  மருத்துவக் கழிவுகளை அப்பகுதியில் கொட்டி வருகின்றனர். நாய்கள்,  பன்றிகள் கிளறுவதால் ரோட்டில் சிதறி கிடக்கின்றன. துர்நாற்றத்தால் அப்பகுதியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கிடப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.    தற்போது மழை நேரம் என்பதால் அசுத்தமாக கிடக்கிறது.  பாதிப்பு ஏற்படுவதற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.