முன்விரோத தாக்குதல்: 13 பேர் மீது வழக்கு
விருதுநகர்: மன்னார்கோட்டையைச் சேர்ந்தவர் கதிரேசன் 51. இவரின் மகன் அஜித் பாண்டி. இவருடன் 2022 ல் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் டூவீலரில் சென்று விபத்தில் பலியானார். இந்த முன்விரோதத்தில் ஜன. 16 ல் மாலை 5:30 மணிக்கு அஜித்பாண்டியை, மணிகண்டன் உறவினர்கள் வாழவந்தான், காளீஸ்வரன், சரவணக்குமார், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, செல்வராணி, லதா தாக்கினர். இதை தடுக்க சென்ற கதிரேசன், மகேஸ்வரன், வேல்பாண்டி, கருப்பசாமியையும் தாக்கியதில் காயமடைந்தனர். அதே போல காளீஸ்வரன், தந்தை வாழவந்தான் மீது அஜித்பாண்டி, உறவினர்கள் மகேஸ்வரன், வேல்பாண்டி, கதிரேசன், மகேஷ் தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். வச்சக்காரப்பட்டி போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாட்ச்மேன் மீது தாக்குதல்
விருதுநகர்: கூரைக்குண்டு கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் 57. இவர் குல்லுார் சந்தை அணையில் வாட்ச்மேனாக உள்ளார். அங்கு மீன்பிடித்த கூரைக்குண்டைச் சேர்ந்த அய்யனாரை திட்டியதால் ஜன. 17 மதியம் 3:00 மணிக்கு மாரியப்பனை தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
சாத்துார்: சாத்துார் கே.முத்துச் சாமிபுரத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் இவர் கணவர்வெள்ளத்துரை, 52. மதுரை போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் ஓ.ஏ.வாக பணிபுரிந்து வந்தார். டிச.27 ல் சாத்துார் வந்தவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சாத்துார்: வெம்பக்கோட்டை வி.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மணிகண்டன், 26. மினரல் வாட்டர் வண்டியில் பணி புரிந்து வந்தார்.நேற்று முன்தினம் முத்தால் நாயக்கன்பட்டியில் குடிநீர் விற்பனை செய்தபோது நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கினார். சாத்துார் அரசு மருத்துவமனையில் இறந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம்
சிவகாசி: சிவகாசி ரிசர்வேஷன் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சத்யராஜ் மகள் துர்கா 11. இவர் வீட்டிற்கு அருகில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
சிவகாசி: சிவகாசி ஜமீன் சல்வார் பட்டி பாறைப்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரி செல்வம் 36. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அருகில் குடியிருக்கும் கருப்பசாமி, மதன்குமாருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கருப்பசாமி, மதன் குமாரின் சகோதரர் மாரிக்கனி ஆகியோர் மாரி செல்வத்தை பீர்பாட்டில், கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு மது பாட்டில் அடி
சிவகாசி: சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் 23. இவரின் உறவினர் சரவணனுக்கும் அருகில் வசிக்கும் முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து கேட்ட விஜயகுமாரை முருகன் தகாத வார்த்தை பேசி மதுபாட்டிலால் அடித்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

