sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 21, 2024 03:12 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடை பயிற்சிக்குசென்றவர் மீதுடூவீலர் மோதி விபத்து


விருதுநகர்: கே.செவல்பட்டியைசேர்ந்தவர் செந்தாமரை 45. இவர் ஜன. 19 அதிகாலை 5:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நடைபயிற்சி செய்து விட்டு திரும்பினார். அப்போது சூலக்கரையைச் சேர்ந்த பாலசங்கர் 25, டூவீலரில் வந்து மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி விபத்து


விருதுநகர்: துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் அசோக் 34. இவர் ஜன. 18 இரவு 7:20 மணிக்கு விருதுநகர் - சாத்துார் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது சாத்துார் டோல்கேட் அருகே திருமங்கலத்தைச் சேர்ந்த குமார் 51, காரில் வந்து மோதியதில் அசோக் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் காயம்


அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கீழ வீட்டார் தெருவைச் சேர்ந்தவர் சோலைமணி 56. இவர் முதியோர் பென்சன் வாங்குவதற்காக அருப்புக்கோட்டை பஜாரில் நடந்து சென்ற போது கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் தண்ணீர் வாகனம் ஒட்டி வந்து மோதியதில் சோலைமணி காயமடைந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மோதிதாய், மகன் காயம்


அருப்புக்கோட்டை: விருதுநகர்பர்மா காலனியைச் சேர்ந்தவர்முகம்மது ஆயூப் 27. இவரின்தாய் ஷகிலா பானு 47, இவரை சிகிச்சைக்காக டூவீலரில்அழைத்து சென்றுவிட்டு அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோட்டில் வந்துள்ளார். அப்போது திருக்குமரன் நகரைச் சேர்ந்த கிருபா டூவீலரில் வந்து மோதியதில் முகம்மது ஆயூப், ஷகிலா பானு காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி மாயம்


விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் காயத்ரி 20. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். பொங்கல், தேர்வு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர், ஜன. 19 காலை 10:30 மணிக்கு அல்லம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றவரை காணவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

நாய் கடித்ததை தட்டி கேட்டவர் மீதுதாக்குதல்


அருப்புக்கோட்டை: வடுகர்கோட்டை, நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டியன் 41. இவர் ஆம்னி பஸ்சில் ஒட்டுநராக பணியாற்றுகிறார். இவர் ஜன. 18 காலை 10:00 மணிக்கு பணிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் நாய் கடித்தது. இதை தட்டிகேட்டவரை மாரியப்பன், மாரீஸ்வரி சேர்ந்து தாக்கியதில் காயமடைந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நிலத்தகராறில் தாக்குதல்


விருதுநகர்: குருமூர்த்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் 24. இவர் ஜன. 18 மதியம் 2:30 மணிக்கு வீட்டின் அருகில் தனியார் தொழிற்சாலைக்கும் இடையே உள்ள நிலத்தை அளந்து கல் ஊன்றும் பணிகளில் ஈடுபட்ட போது முன்விரோதம்காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், சுந்தர்ராஜன், வரலட்சுமி தகராறில் ஈடுப்பட்டு அருண்குமாரை தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் மீது தாக்குதல்


விருதுநகர்: துலுக்கப்பட்டி ராஜீவ் காந்தி காலனியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் 43. இவர் ஜன. 15 மாலை 4:15 மணிக்கு வீட்டு வாசலில் நின்றவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்குமார் 28, முருகன் 30, முருகலட்சுமி 26, விஜயலட்சுமி 35 தாக்கியதில் காயமடைந்து சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவியை அடித்தகணவன் மீது வழக்கு


சிவகாசி: சிவகாசி ஊராம் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா 29. இவரது கணவர் ராமமூர்த்தி 30. இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஐஸ்வர்யாவின் 5 ஐந்து பவுன் தங்க நகையில் நான்கு பவுன் தங்க நகையை விற்று ராமமூர்த்தி செலவு செய்துவிட்டார். மீதம் ஒரு பவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் அருகில் தகர செட் போட்டு தங்கினர். அந்த செட்டை தனது அண்ணன் மனைவி ராஜலட்சுமிக்கு தரவேண்டும் என ராமமூர்த்தி ஐஸ்வர்யாவை அடித்து விரட்டினார். மீண்டும் வீட்டிற்கு வந்த அவரை ராமமூர்த்தி தகாத வார்த்தை பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.-----

இளம் பெண் மாயம்


சிவகாசி: சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 28. இவரது மனைவி முத்துச்செல்வி 23. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. முத்துச்செல்வி அடிக்கடி அலைபேசியில் பேசியதை அவரது கணவர் கண்டித்தார். இந்நிலையில் முத்துச்செல்வி வீட்டில் இருந்து மாயமானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.-----

அக்காவை அடித்த தம்பி


சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 38. தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் இவரை, சகோதரர்மகேந்திரன் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது கிளம்பி விடு உனக்கு சொத்தில் எந்த பங்கும் கிடையாது என தகாத வார்த்தை பேசி பிளாஸ்டிக் குழாயால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.-------

பெண் மாயம்


சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் காந்தி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, மனைவி வீரலட்சுமி 40. இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது .இந்நிலையில் மருத்துவமனைக்கு போவதாக கூறிச்சென்ற வீரலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.------

பெண்ணுக்கு அடி


சிவகாசி: சிவகாசி கொங்கலாபுரம் திருமலை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லதா 43. இவர் வீட்டில் இருந்தபோது இவரது மகனின் நண்பர் ராஜதுரை, விக்னேஷ்வரன், மாரீஸ்வரன், பாண்டி ஆகியோர் வந்து உனது மகன் எங்கே என கேட்டு அடித்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை


சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சித்ரா, 22. இவர் கனகராஜ், 24. பட்டாசு தொழிலாளி. கனகராஜ் தினமும் மது குடித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரா தன்னை விவகாரத்து செய்து விடும்படி கனகராஜிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கம்பியால் தாக்குதல்3 பேர் மீது வழக்கு


சாத்துார்: சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் மனோகரன், 56.ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக குரு லிங்கபுரத்தை சேர்ந்த காளியப்பன், 54. மாரீஸ்வரன்,39. படந்தால் கோவிந்தராஜ், 54. ஆகியோர் மனோகரனின் ஐஸ் கம்பெனிக்குள் புகுந்து மனோகரனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக் கின்றனர்.

கோஷ்டி மோதல்10 பேர் மீது வழக்கு


சாத்துார்: சிந்துவம் பட்டியை சேர்ந்தவர் அன்பு குமார், 35. அதே ஊரை சேர்ந்தவர் முத்துவேல் மணி, 34. இருவருக்கும் முன்பகை இருந்துள்ளது. ஜன.18.ல் மளிகை கடையில் இருவரும் உறவினர்களுடன் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் உருவானது. அன்பு குமார் புகார் படி சிலம்பரசன், சிவா, மனோஜ் குமார் ,செல்வம், ராஜேஷ் வல்லவன் மீதும் முத்துவேல் மணி புகார்படி அன்புக்குமார், அய்யனார், ஜெயா, சீதா ஆகியோர் மீதும் இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மயங்கி விழுந்து வாலிபர் பலி


சாத்துார்: ஆலங்குளம் அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் வைரமுத்து, 29. அங்குள்ளலேத் பட்டறையில் பணி புரிந்து வந்தார். ஜன.19 காலையில் வேலைக்கு சென்றவர். டீக்கடையில் டீ குடித்துவிட்டு திரும்பவேலை செய்யும் இடத்திற்கு நடந்து வந்தபோது மயங்கி கீழே விழுந்து இறந்தார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி தற்கொலை


விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி 60. இவர் கடன் பிரச்னையால் நேற்று மாலை 6:45 மணிக்கு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில்நாகர்கோவில் - தாம்பரம் செல்லும்அந்தியோதயா எக்ஸ்பிரஸ் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us