கார் மோதி விபத்து
விருதுநகர்: எம்.அழகாபுரியைச் சேர்ந்தவர் சசிக்குமார் 43. இவர் ஜன. 21 இரவு 8:50 மணிக்கு விருதுநகர் - சாத்துார் தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் தொழில் தகராறு: 8 பேர் மீது வழக்கு
விருதுநகர்: சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் 25. இவருக்கும் முனியராஜ் என்பவருக்கும் ஆம்புலன்ஸ் தொழிலில் ஏற்பட்ட மோதலில் முனியராஜ் மீது போலீசில் புகார் அளித்தார். இதை வாபஸ் பெற கூறி விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே ஜன. 21 நள்ளிரவு 12:00 மணிக்கு பேசிய போது ஏற்பட்ட தகராறில் முனிராஜ், மணிகண்டன், குருசாமி, முனிஸ் சேர்ந்து பிரகாஷ் ராஜை தாக்கியதில் காயமடைந்தார். அதே போல காந்திநகரைச் சேர்ந்த மணிகண்டன் 25, மீது பிரகாஷ் ராஜ், மாதேஷ், அஜித், விக்னேஷ் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து தாய், மகள் காயம்
அருப்புக்கோட்டை: ராமநாதபுரம், கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் ஜாஸ்மின்பேபி. இவர் ஜன. 22 காலை 10:10 மணிக்கு தாய் ஜோதியம்மாளுடன் ஆட்டோவில் விருதுநகர் மிலிட்டரி கேண்டீனிற்கு பொருட்கள் வாங்க பாலவநத்தம் அருகே சென்றபோது எதிரே ராமநாதபுரம் மாரந்தையைச் சேர்ந்த மாரிமுத்து ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து தாய், மகள் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லால் தாக்குதல்
சிவகாசி: திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி காளைசாமி 58. அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் அங்கு தகாத வார்த்தை பேசிக் கொண்டிருந்தார். இதனை காளைசாமி சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த கண்ணன் அவரை தகாத வார்த்தை பேசி கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.--
பாறை விழுந்து டிரைவர் பலி
திருச்சுழி: திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தில் தனியார் கல்குவாரியில் மானாமதுரை அருகே கீழ் மேல்குடியை சேர்ந்த சேதுபதி, 25, மண் அள்ளும் இயந்திர டிரைவராக இருந்தார். திருமணம் ஆகவில்லை.
நேற்று காலை 7.30 மணிக்கு பணியில் இருந்த போது பெரிய பாறை சரிந்து மண் அள்ளும் இயந்திரம் மீது விழுந்து நசுங்கியதில் சேதுபதி பலியானார். திருச்சுழி போலீசார் குவாரி உரிமையாளர் தமிழ்ச்செல்வம் 60, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.--
கார் திருட்டு; 4 பேர் சிக்கினர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது கார் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து கார் மீட்கப்பட்டது.

