/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி
/
கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி
கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி
கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி
ADDED : ஜன 21, 2024 03:02 AM
விருதுநகர்: விருதுநகர் செந்நெல்குடி, மெட்டுக்குண்டு, எண்டப்புலி ஆகிய மூன்று கிராமங்களில் 'விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய அரசின்திட்டங்கள் குறித்து மக்கள், விவசாயிகளிடம் விளக்கப்பட்டது. இந்தியவேளாண் ஆராய்ச்சி கழக தொழில்நுட்ப அதிகாரி செல்வமுத்து, உதவி அலுவலர் அனந்தபத்மநாபன் முன்னிலை வகித்தனர். பிரதமரின் வேளாண் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், மண் வள அட்டை, வேளாண் கடன் அட்டைகள், பிரதமரின் வேளாண் பாசன திட்டம், பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆள்பற்றாக்குறைக்கு தீர்வாக ட்ரோன்கள் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் முறைகளின் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
பெண்களுக்கான பிரத்யேக திட்டமான பிரதமரின் உஜ்வாலா திட்டம், முத்ரா திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், விபத்து காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதிதாக காஸ் இணைப்புகள்வழங்கப்பட்டன. மருத்துவ முகாம் நடத்தி பரிசோதனைகள் செய்யப்பட்டன.

