நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடந்தது.
வணிகவியல் துறை தலைவர் பொன்னியின் செல்வி வரவேற்றார். தேர்வு ஆணையர் கார்த்திகைலட்சுமி பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவர்கள் 2ம் பரிசையும் வென்றனர். உதவி பேராசிரியர்கள் பஞ்சவர்ணம் ஒருங்கிணைக்க, நந்தினி நடத்தினார். மாணவி பத்மாவதி நன்றிக்கூறினார்.

