/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளாம்பட்டி காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
/
விளாம்பட்டி காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
விளாம்பட்டி காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
விளாம்பட்டி காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
ADDED : ஜன 10, 2024 12:05 AM

சிவகாசி : சிவகாசி அருகே விளாம்பட்டி காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர்.
சிவகாசி சுற்றுப்பகுதியில் ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. சிவகாசி அருகே விளாம்பட்டி காமராஜர் காலனியில் கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். இப்பகுதி வழியே செல்லும் ஓடையில் விளாம்பட்டி கண்மாய் நிறைந்தால் தண்ணீர் செல்லும்.
ஆனால் ஓடையில் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு விட்டது. இதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் நாசமானது. இதனோடு கழிவு நீரும் சேர்ந்ததால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் உடனடியாக ஓடையை முழுமையாக துார்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தொடர் மழை பெய்ததால் தேவர்குளம் ஊராட்சியில் பல பகுதிகளிலும் சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரை அருகில் உள்ள சிறுகுளம் காலனி பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

