/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருப்பிடம் அடிப்படையில் நியமிக்க கோரிக்கை
/
இருப்பிடம் அடிப்படையில் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜன 24, 2024 05:27 AM
விருதுநகர் : தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செய்திக்குறிப்பு: நடக்க உள்ள மேல்நிலை பொதுத்தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பணிமூப்பு அடிப்படையிலேயே பணிநியமனம் செய்யப்பட வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த சிரமங்களை அடிப்படை வசதிகளின்றி முதுகலை ஆசிரியர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. இந்தாண்டு உரிய அறை வசதிகளுடன் விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைத்து தர வேண்டும்.
ஆசிரியர் மாணவர் நலன் கருதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணிநியமனத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும் வழித்தட அலுவலர் பொறுப்பு வழங்க வேண்டும். அறை கண்காணிப்பாளர் பணிநியமனம் இருப்பிட முகவரியின் அடிப்படையில் அருகில் நியமனம் செய்யப்பட வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

