/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியல்
/
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியல்
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியல்
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியல்
ADDED : ஜன 19, 2024 04:27 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் பாதை வசதி செய்து தரவும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் திருவள்ளுவர் நெசவாளர் காலனி 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல இலுப்பிலாங்குளம் கண்மாய் அருகே உள்ள பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்பிலிருந்து சுமார் 1 கி.மீ., தொலைவு உள்ள மயானத்திற்கு இதுவரை முறையான பாதை வசதி செய்து தரப்படவில்லை. நேற்று இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னேற்பாட்டிற்கு சென்றவர்களை மயானத்தை ஆக்கிரமித்த சிலர் விரட்டி உள்ளனர்.
அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறி சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ப்ரீத்தி, தாசில்தார் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி மயான பாதை ஏற்பாடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்ற உறுதியை அடுத்து அரை மணி போராட்டம் கைவிடப்பட்டது.

