/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..
ADDED : ஜன 21, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சிவகாசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். வாகன ஓட்டுனர்கள், மக்களுக்கு மது அருந்தி வாகன ஓட்டக்கூடாது போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

