/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்
/
எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்
எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்
எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்
ADDED : ஜன 19, 2024 04:25 AM

காரியாபட்டி: காரியாபட்டி எஸ். கடம்பன்குளத்தில் மயான ரோடு முழுமையாக போடாததால் இறப்பின் போது தேர் வண்டி செல்ல முடியாமல் தட்டு தடுமாறுகின்றனர். முழுமையாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
காரியாபட்டி எஸ். கடம்பன்குளத்தில் மயானத்திற்கு ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. மயானத்திற்கு 30 மீட்டருக்கு முன் வரை
தார் கலவை போடப்பட்டுள்ளது. மயானத்திற்குள் ரோடு போடவில்லை. மழை நேரத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் இறப்பின் போது தேர் வண்டி செல்ல முடியவில்லை. சகதிக்குள் சக்கரங்கள் பதிந்து கொள்வதால் தட்டு தடுமாறி கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. உள்ளாட்சி அதிகாரிகள் 30 மீட்டர் தூரத்திற்கும் முழுமையாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.