/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி வேன் சக்கரம் ஏறி மாணவி உயிரிழப்பு
/
பள்ளி வேன் சக்கரம் ஏறி மாணவி உயிரிழப்பு
ADDED : ஜன 19, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சோலைசேரி மந்தை தெருவை சேர்ந்தவர் பெருமாள். ராணுவ வீரர். இவரது மகள் சாய் சிவானி 5, ராஜபாளையம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி யூகேஜி மாணவி.
நேற்று மாலை 5:00 மணிக்கு சோலைச்சேரியில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வேனில் இருந்து கீழே இறங்கினார். அப்போது டிரைவர் மாணவியை கவனிக்காமல் வேனை இயக்கியதால் பின் சக்கரம் மாணவியின் மேல் ஏறி இறங்கியதில் பலியானார். சேத்துார் ஊரக போலீசார் வேன் டிரைவர் ஜெகதீஸ்வரனை 31, கைது செய்து விசாரிக்கின்றனர்.

