/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை: சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவார்களால்

ADDED : ஜன 19, 2024 04:17 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் தகர செட் அமைத்தும், பட்டாசு கடைகளிலும் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதால் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்திருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாகவும் சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். தவிர உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையின் அருகே காட்டுப்பகுதியிலும் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. இதுபோன்ற பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் முறையாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்களை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கொரோனா கால கட்டத்தில் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வாய்ப்பளித்த நிலையில் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஆலை உரிமையாளர்கள் புலம்புகின்றனர். ஒவ்வொரு ஆலை உரிமையாளர்களும் தங்களது தொழிலாளர்களை தக்க வைப்பதற்கு போராட வேண்டியுள்ளது. தவிர சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் விபத்தில் சிக்கினால் நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். இது தெரிந்தும் ஒரு சிலர் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு துணை போகின்றன. எனவே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.