/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அசுத்தங்களின் பிடியில் ஆன்மிக நகரான ஸ்ரீவி.,
/
அசுத்தங்களின் பிடியில் ஆன்மிக நகரான ஸ்ரீவி.,
ADDED : ஜன 19, 2024 04:13 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆன்மிக நகராக திகழும் ஸ்ரீவில்லிபுத்துாரில் குப்பை தேங்கியும், நீர் வரத்து ஓடைகளில் கழிவுகள் குவிந்தும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆன்மிக சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டாள் கோயில், சதுரகிரி செல்லும் பக்தர்கள் அதிகளவில் இங்கு வந்து செல்வர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பையும் அதிகளவில் சேர்ந்து வருகிறது. மேலும் நகராட்சி தெருக்களில் சேரும் குப்பையை சரி வர அகற்றாததால் சேர்ந்து நகரையை நாறடித்து வரகிறது.
இரண்டு மாதங்களில் பெய்த மழையினால் பெரியகுளம் மற்றும் வடமலைகுறிச்சி கண்மாய் நீர்வரத்து ஓடைகளில் தற்போது தண்ணீர் தெளிந்த நிலையில் செல்லும் நிலையில், கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
பல மாதங்களாக தெருக்களில் தேங்கிக் கிடந்த கழிவுகள் தற்போது நீர்வரத்து ஓடைகளில் குவிந்து சுகாதாரக் கேடு, துர்நாற்றம், கொசுத்தொல்லையை ஏற்படுத்துகிறது.
எனவே, நகரின் அனைத்து தெருக்களிலும், நீர்வரத்து ஓடைகளிலும் தேங்கியுள்ள கழிவுகளை முழு அளவில் வெளியேற்றி தூய்மை நகராக ஸ்ரீவில்லிபுத்தூரை மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் மாஸ் கிளீனிங் முறையில் தூய்மை பணி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

