sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

/

ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்


ADDED : பிப் 06, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்திய சங்கர், மீனாட்சி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 30 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது;

ஜெயமணி (அ.தி.மு.க): திருவண்ணாமலை ஊராட்சியில் பல்வேறு தெருக்களில் அடிப்படை தூய்மைப் பணிகள் நடப்பதில்லை. பல்வேறு கோரிக்கைகள் கொடுத்தும் இதுவரை ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஒரு வேலை மட்டுமே நடந்துள்ளது. ஆண்டாள்புரத்தில் தாமிரபரணி தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அதனை சரி செய்ய வேண்டும்.

ஆறுமுகம் (தலைவர்); திருவண்ணாமலை ஊராட்சியில் ரூ.3 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மாரிமுத்து (அ.ம.மு .க): எனது வார்டில் குறிப்பிட்ட ஒரு தெருவிற்கு ரோடு வசதி செய்து தராததால் அப்பகுதியில் வீடுகள் வரவில்லை. எனவே, ரோடு வசதி செய்து தர வேண்டும்.

ஆறுமுகம் (தலைவர்); வீடுகளே இல்லாத இடத்தில் ரோடு வசதி கேட்டால் எப்படி செய்து தருவது. அப்பகுதியில் வீடுகள் வந்தவுடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

செல்லப்பாண்டி (அ.தி.மு.க): எனது வார்டில் பல்வேறு ஊராட்சிகளில் நான் சுட்டிக்காட்டிய பல்வேறு வேலைகள் செய்யவில்லை. பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும். நாங்கள் என்ன மிக்சர் சாப்பிடவா கூட்டத்திற்கு வருகிறோம்.

ஆறுமுகம் (தலைவர்): அனைத்து ஊராட்சிகளுக்கும் பொதுவான அளவில் தான் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது.-என விவாதம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us