/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் மாநில கைப்பந்து போட்டி
/
கலசலிங்கம் பல்கலையில் மாநில கைப்பந்து போட்டி
ADDED : ஜன 19, 2024 04:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கலசலிங்கம் நினைவு மாநில கைப்பந்து போட்டிக்கு துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார்.
இதில் மாணவர்கள் பிரிவில் 8, மாணவிகள் பிரிவில் 4 அணியிலும் பங்கேற்றன. மாணவர்கள் பிரிவில் ராஜபாளையம் நாடார் உயர்நிலைப்பள்ளி முதலிடம், ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், தென்காசி அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாமிடம், வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப்பள்ளி நான்காமிடம் பெற்றது.
மாணவிகள் பிரிவில் ஓசூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம், விருதுநகர் சத்திரியர் மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், மதுரை ஏ.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளி மூன்றாமிடம், மதுரை பொன்முடியார் உயர்நிலைப்பள்ளி நான்காமிடம் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

