/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர் மண்டிய கண்மாய், அடைபட்ட கால்வாய்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சோளங்குளம் கண்மாய் அவலம்
/
புதர் மண்டிய கண்மாய், அடைபட்ட கால்வாய்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சோளங்குளம் கண்மாய் அவலம்
புதர் மண்டிய கண்மாய், அடைபட்ட கால்வாய்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சோளங்குளம் கண்மாய் அவலம்
புதர் மண்டிய கண்மாய், அடைபட்ட கால்வாய்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சோளங்குளம் கண்மாய் அவலம்
ADDED : ஜூன் 26, 2025 12:44 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: கண்மாய் நீர் பிடிப்பு பகுதி துார்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கும் நிலை, கழிவுகளால் அடைபட்டுள்ள நீர் வரத்து கால்வாய்களால் ஸ்ரீவில்லிபுத்துார் சோளங்குளம் கண்மாய் விவசாயிகள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் ரோட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த கண்மாய்க்கு பெரியகுளம் கண்மாயின் தெற்கு பகுதி வழியாகவும், நகராட்சி அலுவலகம், ரயில்வே பீடர் ரோடு வழியாகவும் தண்ணீர் வரும் வகையில் நீர் வரத்து கால்வாய்கள் உள்ளது.
இக்கண்மாயின் மூலம் அத்திகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதில் பெரிய குளம் கண்மாயின் தெற்கு பகுதி மடையில் இருந்து வன்னியம்பட்டி, வடக்கு கரிசல் குளம் வழியாகவும் வரும் நீர் வரத்து பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் புதர் மண்டி காணப்படுகிறது.
நகராட்சி அலுவலகம், கிருஷ்ணன் கோவில் ரோடு வழியாக அத்திகுளம் செல்லும் ரோட்டினை ஒட்டி உள்ள நீர்வரத்து கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
கண்மாயின் நீர் பிடிப்பு பகுதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை வளர்ந்தும் உள்ளது.
இந்த கண்மாய் நிரம்பி மறுகால் விழும் பட்சத்தில் அத்திகுளம் கிராமத்தின் வழியாக நொச்சிக்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதை மண்மேவியும், கழிவுகள் கொட்டப்பட்டும் ஆளூயர புற்கள் வளர்ந்தும் அடைபட்டு கிடக்கிறது.
எனவே, இந்த கண்மாயை முழு அளவில் தூர்வாரியும், அடைப்பட்டு கிடக்கும் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து எளிதாக தண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
- செண்பகமூர்த்தி, விவசாயி
-- சுந்தர் ராஜன், விவசாயி