ADDED : ஜன 24, 2024 05:01 AM

சிவகாசி : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக கிராமம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அர்ஜுனா நதி பாலம் அருகே சாணார்பட்டி விலக்கில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு மாதமாக குடிநீர் வீணாகி சென்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இங்கு சேதம் அடைந்த குழாயை சீரமைப்பதோடு ரோட்டினையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

