/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் புழக்கத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை
/
திருத்தங்கலில் புழக்கத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை
திருத்தங்கலில் புழக்கத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை
திருத்தங்கலில் புழக்கத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை
ADDED : ஜன 21, 2024 03:08 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் 18வது முதல் 22வது வார்டுகளுக்கு புழக்கத்திற்குகூட தண்ணீர் இல்லாமல், விலைக்கு வாங்கி மக்கள்அவதிப்படுகின்றனர். இந்த வார்டுகளில் தொட்டி அமைத்து புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில் குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இதன்படி ஒன்று முதல் 17 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கான தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் இல்லை.
இதற்காக 2019ல் பெரியகுளம் கண்மாயில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் இங்கிருந்து அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களை ஆங்காங்கே மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து, அருகே செல்வதற்கு கூட வழியில்லை. இதனால் இன்று வரையிலும் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யவில்லை.
இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்விசை பம்பு குடிநீர் தொட்டிகளையும் காணவில்லை. மீட்டர் பெட்டிகள் மட்டும் உள்ளது.
இதனால் இப்பகுதியினர் குடிப்பதற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என புழக்கத்திற்கும் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்குகின்றனர்.
பட்டாசு, கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் தினமும் தண்ணீரை வாங்குவதற்கு வழியில்லாமல் பெரிதும்சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

