ADDED : ஜன 21, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியை சேர்ந்த முருகன். காரியாபட்டிக்கு வந்தவர் டூவீலரில் ஊருக்கு சென்றார். ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது, எதிரே காரியாபட்டியை சேர்ந்த வைரகுமார் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
பின்னால் அமர்ந்து வந்த ராம்குமார் உட்பட மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

