/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் நெல் விலையை குறைக்கும் வியாபாரிகள்: --சிக்கலில் விவசாயிகள்
/
மழையால் நெல் விலையை குறைக்கும் வியாபாரிகள்: --சிக்கலில் விவசாயிகள்
மழையால் நெல் விலையை குறைக்கும் வியாபாரிகள்: --சிக்கலில் விவசாயிகள்
மழையால் நெல் விலையை குறைக்கும் வியாபாரிகள்: --சிக்கலில் விவசாயிகள்
ADDED : பிப் 01, 2024 11:53 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் திடீர் மழையால் அறுவடை நெற்பயிர்கள் நனைந்து வியாபாரிகள் விலை குறைத்து கேட்பதால் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளான தேவதானம், முகவூர், சத்திரப்பட்டி, சேத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் இரண்டு மணி நேரம் கன மழையும் அதனை தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது.
இந்நிலையில் ஏற்கனவே இப்பகுதி கண்மாய் ஒட்டிய நிலங்களில் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது அறுவடை எட்டியுள்ள பயிர்கள் மழையால் நனைந்துள்ளது.
இதை காரணமாக கூறி ஏற்கனவே மூடை ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் வரை விலை கொடுத்து வந்த வியாபாரிகள் நெல்லின் ஈரத்தை காரணம் கூறி ரூ.300 வரை குறைத்து கேட்கின்றனர்.
இதனால் அறுவடை நெல்லை காய வைக்கவும் வழியின்றி விலையையும் குறைத்து கேட்பதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சேத்துார் மாரிமுத்து: இந்த ஆண்டு அண்டை மாநிலங்களில் நெல் வரத்து இல்லாததால் மூடை ஒன்றுக்கு ரூ 2000 வரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். அரசின் கொள்முதல் விலையை விட அதிகம் கிடைத்து வந்ததால் நேரடி நெல் கொள்முதல் பற்றி கூட ஆர்வம் இன்றி இருந்தோம். இந்நிலையில் எதிர்பாராத திடீர் மழையால் நெற்பயிர்கள் நனைந்து விட்டது.
இவற்றை உலர வைக்க வழியில்லாத நிலையில் வியாபாரிகள் ரூ.300 குறைத்து கேட்கின்றனர். உலர்த்த இடவசதி இல்லாமல் பாதுகாக்கவும் வழியின்றி குறைந்த விலைக்கு விற்கவேண்டிய சங்கடத்தில் உள்ளோம்.

