/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படு மோசமான காரியாபட்டி அரசு மருத்துவமனை ரோடு
/
படு மோசமான காரியாபட்டி அரசு மருத்துவமனை ரோடு
ADDED : செப் 10, 2025 02:01 AM

காரியாபட்டி : காரியாபட்டி அரசு மருத்துவமனை வழியாக செல்லும் ரோடு படுமோசமாக இருப்பதால் நோயாளிகள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.
காரியாபட்டியில் கள்ளிக்குடி மெயின் ரோட்டில் இருந்து பள்ளத்துப்பட்டிக்கு செல்லும் ரோடு வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ரோடு மோசமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது மருத்துவமனை அருகே ரோடு சேதம் அடைந்து படுமோசமாக உள்ளது.
மழை நேரங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியமாக உள்ளது. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. நோயாளிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

