/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜல்லிக்கற்கள் பரப்பி 3 மாதமாச்சு ரோடு எப்போது போடுவீங்க
/
ஜல்லிக்கற்கள் பரப்பி 3 மாதமாச்சு ரோடு எப்போது போடுவீங்க
ஜல்லிக்கற்கள் பரப்பி 3 மாதமாச்சு ரோடு எப்போது போடுவீங்க
ஜல்லிக்கற்கள் பரப்பி 3 மாதமாச்சு ரோடு எப்போது போடுவீங்க
ADDED : ஜன 14, 2024 04:47 AM

சிவகாசி, : சிவகாசி என்.பி.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு தெருவில் சேதம் அடைந்த ரோடு சீரமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு மூன்று மாதமாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி என்.பி.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு தெரு பகுதியில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் இந்த ரோடு மோசமாக சேதமடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.
இதற்காக ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில் அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழ வேண்டி உள்ளது.
எனது இங்கு உடனடியாக ரோடு போடும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.