/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலைக்கழிக்கும் தனியார் வங்கிகள் கடனுதவிக்கு தவிக்கும் பயனாளிகள் கவனம் செலுத்துமா மாவட்ட நிர்வாகம்

ADDED : ஜன 19, 2024 04:19 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு கடனுதவி திட்டங்களில் பயனாளிகளுக்கு துறை அதிகாரிகள் பரிந்துரை கடிதம் அளித்தும் கடன் வழங்காமல் தனியார் வங்கிகள் அலைக்கழிக்கின்றனர்.
மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கும், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்குவது போல் தனியார் வங்கிகளிலும் வழங்க அரசு உத்தரவு உள்ளது.
ஆனால் பல தனியார் வங்கிகள் கடன் வழங்க பயனாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அரசு மக்களின் வாழ்வாதாரத்திற்கும், புதிய தொழில் துவங்குவதற்கும் வழங்கும் இந்த கடனுதவி திட்டங்களை பெற அலையோ அலை என அலைந்தும் கடைசியில் மறுப்பு தான் பதிலாக வருவதாக பயனாளிகள் பலர் குமுறுகின்றனர்.
மேலும் பயனாளிகள் அலைச்சல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் பரிந்துரை கடிதம் என்னவாகிறது என்றும், அதை பின்பற்றி முறையாக கடன் வழங்குகின்றனரா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.
இது போன்ற காரணங்களாலே பலர் கடனுதவி திட்டங்கள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். வாழ்வாதாரத்தின் அடிப்படையாக உள்ள இந்த கடனுதவி திட்டங்களை அரசு வழிகாட்டுதல் படி தகுதி உள்ளோருக்கு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.