/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகத்தாகுளத்தில் தொழிற்பேட்டை அமையுமா
/
அகத்தாகுளத்தில் தொழிற்பேட்டை அமையுமா
ADDED : ஜன 19, 2024 04:20 AM
காரியாபட்டி: மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும் திருச்சுழி பகுதியில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மக்களுக்கு, அகத்தா குளத்தில் தொழற்பேட்டை அமையும் என்பது அறிவிப்போடு நிற்பதால் மக்கள் ஏக்கத்துடனர் உள்ளனர்.
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கிறது. விவசாயம் மட்டுமே பிரதான தொழில். வேலை வாய்ப்பை தேடி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு குடி பெயர்ந்து செல்கின்றனர். இப்பகுதியில் இருக்கிற விவசாய மக்கள் விவசாயத்தை தவிர வேறு வேலை வாய்ப்புக்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.
விவசாய காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் கூலி வேலைக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இது போதிய வருவாய் இல்லாததால் பெரும்பாலான குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன. இப்பகுதியில் பட்டதாரி இளைஞர்கள் வேலை இன்றி கூலி வேலைக்கும் பல்வேறு நிறுவனங்களில் விருப்பமின்றி பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திருச்சுழி அகத்தாகுளம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான எந்த ஒரு ஏற்பாடும் நடக்கவில்லை.
சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். மிகவும் பின்தங்கிய, வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் திருச்சுழி பகுதியில் தொழில் நிறுவனங்களை கொண்டு வர முயற்சி எடுக்கலாம்.
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திருச்சுழி அகத்தாகுளத்தில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அதிகாரிகளை நியமித்து, வேலை வாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர்களை இப்பகுதியில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

