/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்வாயில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் காயம்
/
கால்வாயில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் காயம்
கால்வாயில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் காயம்
கால்வாயில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் காயம்
ADDED : செப் 17, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே கழிவுநீர் கால்வாயில், கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த ஸ்ரீதரன், 24, கார்த்திக், 29, மதுபாலன், 23, மார்த்தாண்டத்தை சேர்ந்த சஞ்சய், 25, ஆகியோர் நேற்று ஊட்டிக்கு சுற்றுலாவிற்காக காரில் சென்றனர்.
விருதுநகர் அரசு பஸ் டிப்போ எதிரே, நான்கு வழிச்சாலையில், நேற்று மாலை, 4:15 மணிக்கு கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பில் இருந்த மின் கம்பத்தில் மோதி, கழிவு நீர் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் சஞ்சய் உயிரிழந்தார். காயமடைந்த மூவரையும், விருதுநகர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.