ADDED : பிப் 25, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், மது பாட்டில்களை அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையுடன் சேர்த்து, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர்.
இதனால், 'குடி'மகன்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுஉள்ளது.
அதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும், பாட்டிலுக்கு, 10 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய, 176 ஊழியர்களை டாஸ்மாக் சஸ்பெண்ட் செய்துள்ளது.

