ADDED : ஜன 13, 2024 11:12 PM
தமிழக அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, குறித்த காலத்தில் செலுத்துவதில்லை.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் நிலத்தில், அதிக திறனில் அந்த மின் நிலையத்தை அமைப்பது போல், வீடு உள்ளிட்ட கட்டடங்களின் மேல், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
அதேபோல, அரசு துறைகள், பொதுத்துறை நிறுவன கட்டடங்களில், 50 கிலோ வாட், 100 கி.வா., என, கட்ட டத்தில் உள்ள இடத்தை பொறுத்து, பல்வேறு திறனில் ஒட்டுமொத்தமாக, 20 மெகா வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை உள்ளது.
இதற்கான செலவை, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஏற்க வேண்டும். சூரியசக்தி மின்சாரத்தை அரசு நிறுவனம் பயன்படுத்தியது போக, உபரியை, மின் வாரியத்திற்கு விற்பனை செய்யலாம். இதனால் அவற்றின், மின் கட்டண செலவும் குறையும். 1 கிலோ வாட் சூரியசக்தி மின் நிலையத்தில் இருந்து, 4 - 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

