ADDED : ஜன 23, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் நேற்று முன்தினம், காற்றில் பறந்து வந்த மஞ்சள் நிற ராட்சத பலுான் ஒன்று, இரண்டாவது ஓடுபாதையில் விழுந்தது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் இதைப் பார்த்து, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஓடுபாதையில் கிடந்த 5 அடி விட்டமுடைய ராட்சத பலுான் மற்றும் நைலான் கயிறை, அங்கிருந்து அகற்றினர்.
விசாரணையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி விளம்பரத்திற்காக பறக்க விடப்பட்ட பலுான் என தெரிந்தது.

