ADDED : செப் 26, 2025 01:37 AM

கிராமப்புறங்களில், காவி சித்தாந்தத்துடன் சிலர் வருவர். மக்களை சிதறடிக்க, கோவில் கட்டித்தருகிறேன்; அதற்காக, 2, 3 லட்சம் ரூபாய் தருகிறேன் என கூறுவர். அதை நம்பக்கூடாது. கோவில் கட்ட தமிழக அரசு நிதி வழங்குகிறது.
தி.மு.க., கூட்டணியில் இருந்ததால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. வி.சி., கட்சி ஜாதி கட்சி கிடையாது. இது கொள்கை அடிப்படையில் உருவான கட்சி. புதிதாக வந்த கட்சிகள் எல்லாம், மாலை 6:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மாட்டார்கள்; பேசவும் மாட்டார்கள்.
குறிப்பாக, சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்துவர். ஆனால், எந்நேரமும் மக்களோடு மக்களாக இருப்பது தி.மு.க., கூட்டணி கட்சியினர் தான். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சிதறி கிடக்கின்றன.
- திருமாவளவன்,
தலைவர், விடுதலை சிறுத்தைகள்